தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்- வேட்பாளர்

தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன்- வேட்பாளர்
X

மத்திய அரசின் திட்டங்களை பெற்று விருதுநகர் தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் வாக்குறுதி அளித்தார்.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கன் விருதுநகர் ஒன்றிய பகுதிகளான பெத்தனாட்சி நகர், பாலாஜி நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் வீதி வீதியாக நடைபயணமாக சென்று பொது மக்களை நேரடியாக சந்தித்து துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து தான் வெற்றி பெற்றால் அரசின் அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 6 சிலிண்டர்,வாஷிங் மெசின் மற்றும் , குடும்ப தலைவிக்கு ரூ. 1,500 வழங்கப்படும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மத்திய அரசின் திட்டங்களை பெற்று விருதுநகர் தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!