விருதுநகர் வந்த அமைச்சர் அரசு அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.

விருதுநகர் வந்த அமைச்சர் அரசு அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.
X
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக பதவி ஏற்று முதன் முதலாக விருதுநகர் வந்தார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்...

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார் இதையடுத்து அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக பொறுப்பேற்ற இன்று அவரது இல்லம் திரும்பினார்.

அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சார்பாக மந்திரங்கள் முழங்க மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை அளிக்கப்பட்டது அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து சென்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்