விருதுநகரில் மின்சாரம் தாக்கி பெண் பலி
விருதுநகர் பாண்டியநகரில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் குட்டிபாண்டி அனிதா தம்பதியினர். குட்டி பாண்டி பெயிட்னராக பணிபுரித்து வரும் நிலையில் அனிதா குடும்பத் தலைவியாக உள்ளார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இன்று காலை அனிதா (32) வீட்டு வேலை செய்து கொண்டு இருந்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் இதை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த ஊரக காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்க்கு வந்தனர். அனிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அனிதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிர் இழந்தாக கூறினார். இது குறித்து ஊரக காவல்த்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி குடும்ப தலைவி உயிர் இழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu