திருச்சுழி அருகே நடந்த வடமாடு மஞ்சு விரட்டு

திருச்சுழி அருகே நடந்த  வடமாடு மஞ்சு விரட்டு
X

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள அம்மன்பட்டி பகுதியில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது

திருச்சுழி அருகே அம்மன்பட்டி காளியம்மன் கோவில் பொங்கல் மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது

திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள அம்மன்பட்டி பகுதியில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் பங்கேற்றன. ஒரு காளைக்கு ஒரு குழு என்ற விகிதத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒரு குழுவிற்கு 9 வீரர்கள், 3 மாற்று வீரர்கள் என மொத்தம்‌ 10குழுவில் 120 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு பிடித்தனர். முன்னதாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு சுற்றுப் போட்டியும் 25 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்த 25 நிமிடங்களுக்குள் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் இருந்த காளைகளுக்கும் ரொக்கப்பணம், தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், பீரோ, அண்டா உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஆர்வத்துடன், உற்சாகமாக பார்த்து ரசித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது