தமிழகத்தை ஸ்டாலின் மீட்பார்- தங்கம்தென்னரசு

தமிழகத்தை ஸ்டாலின் மீட்பார்- தங்கம்தென்னரசு
X

கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் தமிழகத்தை இபிஸ் ஓபிஸ் ஆகியோர் அடகு வைத்து விட்டதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி திமுக சார்பில் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிக்கப்பட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட நெடுங்குளம், மேலப்பாறைக்குளம், உடையநாதபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் அப்பகுதி மக்களிடம் பேசிய அவர், கடந்த 10 ஆண்டு காலமாக மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் தமிழகத்தை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடகு வைத்து விட்டதாகவும் அதனை திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் மீட்டு எடுத்து மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றபடும் என உறுதியளித்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!