காரியாபட்டி அருகே கூடுதல் பேரூந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

காரியாபட்டி அருகே கூடுதல் பேரூந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்
X

காரியாபட்டி அருகே பள்ளி செல்ல கூடுதல் பேரூந்து வேண்டி மாணவ மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்

காரியாபட்டி அருகே பள்ளி செல்ல கூடுதல் பேரூந்து வேண்டி பள்ளி, மாணவ மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி அருகே பள்ளி செல்ல கூடுதல் பேரூந்து வேண்டி மாணவ மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பள்ளி செல்ல கூடுதல் பேரூந்து வேண்டி 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

காரியாபட்டி அருகே நரிக்குடி சாலையில் தேனூர் விளக்கு ரோட்டில் பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து வேண்டி சாலைமறைக்குளம் பள்ளிக்கு செல்லும் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். தேனூர் சூரனூர், சித்தனேந்தல், கூவர்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சாலைமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தினம்தோறும் காலை பள்ளிக்கு செல்லும் நேரத்தில் ஒரு பேருந்து வசதி மட்டும் இருப்பதால் அனைத்து மாணவ, மாணவிகளும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல இயலாத நிலை இருந்துள்ளது. இது சம்பந்தமாக போக்குவரத்துதுறை அதிகாரிகளிடமும், கல்வித்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலையில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பேருந்தில் ஏறும் போது கூட்ட நெரிசலில் ஒரு மாணவன் தவறி விழுந்து விட இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் கூடுதல் பஸ் வேண்டி பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த முக்குளம் காவல் சார்பு ஆய்வாளர் தமிழழகன், கமல், திமுக மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் பஸ் டிப்போவில் இருந்து தினமும் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கபடும் என கூறி சமாதானப் படுத்தினார். இதில் சமரசம் அடைந்து பஸ் மறியல் போராட்டத்தை பள்ளி மாணவ, மாணவிகள் கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரு மணி நேரம் நீடித்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!