இராஜபாளையத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராஜபாளையத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனவரி மாத சம்பளத்தை வழங்க கோரியும் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஒய்வூதியத் தினை இரத்து செய்து பழைய ஒய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஒய்வூதியமே தொடரட்டும் என தொடங்கப்பட்டுள்ளது.
அதுபோல், தமிழகத்திலும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதிய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதிய குழு அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள காலம் தொட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது.
இதனால், இடைநிலை ஆசிரியர்களுக்கு பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தேர்தல் வாக்குறுதி யில் அறிவித்தது போல் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலை சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
தொழில் நுட்பத்தால் மேம்படாத EMIS வலைதளத்தின் மூலம் ஆசிரியர்கள் பதிவேற்றங்கள் செய்திட வேண்டும் புள்ளி விவரங்களைத் தொகுத்து வழங்கப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்,ஆசிரியர்கள் கற்றது கற்பித்தலுக்கு இடையூறு ஏற்பட்டு மாணவர்களுக்கு கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த EMIS வலைதளத்தில் ஆசிரியர்கள் பதவியேற்றம் செய்யப்படுவதை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும்.
ஒரே நாடு ஒரே கொள்கை ஏற்ற ஏழாவது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தப்பட வேண்டும் மத்திய அரசு இதற்கானநிதியை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகல விலைப் பட்டியினை நிலுவையின்றி அறிவித்த தேதி வழங்கப்பட வேண்டும், உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் சரவணக்குமார் பேசுகையில், ஆட்சி மாறினாலும் ஆசிரியர்களின் அவலநிலை மாறவில்லை. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகிறது. தற்போது , அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதார ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது கண்டிக்கத்தக்கது என்றார் அவர். இதைதொடர்ந்து, ஜனவரி மாத சம்பளத்தை வழங்க கோரியும், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலாளர் சரவணகுமார், பொருளாளர் உதயகுமார், மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மாரியப்பன், வட்டாரச் செயலாளர்கள் ரத்தினம், முத்துராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டாரப்பெருளாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu