இடத்தகராறில் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இடத்தகராறில் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
X

பைல் படம்

திருச்சுழி அருகே இடத்தகராறில் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

திருச்சுழி அருகே இடத்தகராறில் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள கோனப்பனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கோபால்சாமி (55). இவரது வீட்டின் அருகேயுள்ள வீட்டில் வசித்து வருபவர் பெருமாள்சாமி (51). இவர்கள் இருவருக்கும் வீட்டின் நடைபாதை இடத்தில் பிரச்சினை ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பெருமாள்சாமி, கோபால்சாமியை பலமாக தாக்கினார்.

படுகாயமடைந்த கோபால்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து திருச்சுழி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து பெருமாள்சாமியை கைது செய்தனர். சம்பவம் குறித்த வழக்கு விருதுநகர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமானந்தகுமார், குற்றவாளி பெருமாள்சாமிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story