புதுமைப் பெண் திட்டம்: மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்கள்

விருதுநகர் மாவட்டத்தில், 637 மாணவிகளுக்கு புதுமை பெண் திட்ட உதவி தொகையை அமைச்சர்கள் வழங்கினர்.(பைல் படம்)
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில், புதுமை பெண் திட்டத்தின் மூலமாக பயன்பெறும், 637 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையுடன்,வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப் பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை(Debit Card)களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை தங்கம்தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியல், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்குபுதுமை பெண் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, தமிழகத்தில் ஏழை எளிய குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலை உயர்வதற்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அரசுப்பள்ளியில் படித்து, உயர்கல்வி கற்பதற்காக கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவிகளின் நலனுக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்று முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 637 மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று பேசினார்.
நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், சிவகாசி எம்எல்ஏ அசோகன், சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் இராஜம், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கள்வன், உதவி ஆட்சியர்(பயிற்சி) ஷாலினி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu