திருச்சுழி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
திருச்சுழி அருகே நெல்லி குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரர்கள்
திருச்சுழி அருகே நெல்லிக்குளத்தில், வீரசூரய்யா. அழகுநாச்சியம்மன் கோவில் உற்சவத்தை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு திருவிழாவில். காளைகள் சிறிபாய்ந்து அமர்க்களம்படுத்தின. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், நெல்லிக்குளம் வீரசூரய்யா - அழகு நாச்சியம்மன் -கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது.
திருச்சுழி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகள் அழைத்து வரப்பட்டது. கால்நடை மருத்துவக் குழுவினரால் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
காலை 9.00 மணியளவில் முதலாவதாக கோவில் காளை மற்றும் நேர்த்திக்கடன் மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டதும் சீறிப்பாயந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கு பீரோ கட்டில், மிக்சி, பிரிட்ஜ் சைக்கிள், எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.வாடிவாசலிருந்து காளை அவிழ்த்து விடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu