திருச்சுழி கிளை நூலகத்தில் இலவச நீட் தேர்வு பயிற்சி

திருச்சுழி கிளை நூலகத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட விண்ணப்பம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது
திருச்சுழியில், நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. சென்னை ஸ்டெடிபிரீஸ் சென்டர் சார்பாக திருச்சுழி கிளை நூலகத்தில் நீட் தேர்வு இலவச பயிற்சி முகாம் துவங்கப்பட்டது.
திருச்சுழி வைத்தியலிங்கநாடார் பள்ளி நிர்வாக பெரியண்ணன்ராஜன் பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில், தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியர் செல்லப்பாண்டியன், அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் நாகநாதன், ஸ்டெடிபிரீஸ் சென்டர் இயக்குனர் சுதந்திரபாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் அழகேசன் வரவேற்றார் .கிளை நூலகர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu