காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இலவச மருத்துவ பொது முகாம்

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் இலவச மருத்துவ பொது முகாம்
X

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாம்.

விருதுநகர் மாவட்டம், காரியாட்டி கல்குறிச்சியில் அமலா கிளினிக் சார்பாக, இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், காரியாட்டி கல்குறிச்சியில், அமலா கிளினிக் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்அமலா கிளினிக் வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு, காரியாபட்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் இராஜேந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி.எம். டிரஸ்ட் தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். மதுரை இராஜாஜி மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் காமாட்சி சங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினரால் நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில், கல்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் கணேசன், ஜோகில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, தலைமை தபால் நிலைய அலுவலர் பால்பாண்டி, மனித பாதுகாப்பு கழகம் மாவட்ட செயலாளர் பிரின்ஸ், கல்குறிச்சி சாய்பாபா நர்சிங் கல்லூரி தாளாளர் ரமேஷ், கண்ணன் முதல்வர் மகேஷ்வரி, விவேகானந்தா கேந்திரா பேச்சியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர் .அமலா கிளினிக் நிறுவனர் டாக்டர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare