திருச்சுழி கண்மாயில் ஆறு கற்சிலைகள் கண்டெடுப்பு

திருச்சுழி அருகே கண்மாயில் இருந்து பழமையான 6 கற்சிலைகள் மீட்கப்பட்டது
திருச்சுழி அருகே கண்மாயில் இருந்து பழமையான 6 கற்சிலைகள் மீட்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ளது விடத்தக்குளம் கண்மாய் திருச்சுழி பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த கண்மாயில் குளிப்பது வழக்கம். சிலர் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்த போது, சிலைகள் சில அவர்கள் காலில் தட்டுப்பட்டது. இது குறித்து, திருச்சுழி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் கண்மாய்க்குள் கிடந்த சிலைகளை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
திருச்சுழி பொதுமக்கள் உதவியுடன் கண்மாய் நீருக்குள் மூழ்கி கிடந்த 3 அடி உயரமுள்ள தலையில்லாத அம்மன் சிலை ஒன்றும், மற்றொரு அம்மன் சிலையும், கருப்பசாமி சிலை ஒன்றும், நாகங்கள் சிலைகள் மூன்றும் என மொத்தம் 6 சிலைகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சிலைகள் அத்தனையும், மிகப்பழமையான கற்சிலைகள்.
இந்த சிலைகள் எதேனும் கோவில் கட்டும் போது அவற்றில் வைப்பதற்காக செய்யப்பட்ட சிலைகளா, அல்லது எதேனும் பழமையான கோவிலிலிருந்து இந்த சிலைகள் எடுத்து வந்து கண்மாய்க்குள் போடப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கண்மாயில் மீட்கப்பட்ட பழமையான 6 கற்சிலைகளையும், வட்டாட்சியர் சிவக்குமார் ,விருதுநகர் அரசு அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தார். திருச்சுழி அருகேயுள்ள விடத்தக்குளம் கண்மாய்க்குள் இருந்து, பழமையான 6 கல் சிலைகள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu