காரியாபட்டி அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரியாபட்டி அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய, எஸ்.ஐ. பா. அசோக்குமார்.
காரியாபட்டி அருகே காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்.
காரியாபட்டி அருகே, பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், முக்குளம் காவல் நிலையம் சார்பாக எஸ். மறைக்குளம் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது..
கூட்டத்தில்,முக்குளம் சார்பு ஆய்வாளர் பா. அசோக்குமார், கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிறிய சிறிய தவறு செய்யும் போது படிப்பு வீணாகிவிடும். மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறையால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
இதனால், அரசு வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும். செல்போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். செல்போன் மாணவர்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது.
பேருந்தில் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்தும் , போக்குவரத்து விதிமுறைகளையும் தலைக் கவசத்தின் அவசியத்தையும், பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும், போக்சோ சட்டம் யார் மீது பாயும், குழந்தை திருமணம் செய்து வைத்தால் யாருக்கு என்ன தண்டனைகள்,1098 செயல் பாடுகள், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பள்ளிக்கு சரியான நேரத்துக்கு வருதல் ஜாதி அடையாளங்களான பனியன்கள் கை பட்டைகள் தவிர்க்கவும்மேலும், சைபர் கிரைம் குற்றம் சம்பந்தமாக குற்றங்கள் பற்றியும் அவரை தடுக்கும் பொருட்டு 1930 இலவச தொலைபேசி எண்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
இதில்,மறைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu