குடும்ப பிரச்சனை: ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை

குடும்ப பிரச்சனை: ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
X
நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட N.முக்குளம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட N.முக்குளம் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகந்நாதன் வயது 45, திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். விவசாய விளைபொருட்கள் கமிஷன் வியாபாரம் செய்து வரும் ஜெகந்நாதன் இவர் தனது வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற நரிக்குடி காவல்துறையினர் ஜெகந்நாதன் உடலை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தினர், முதற்கட்ட விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்டது இந்த கிராம பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai healthcare technology