திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருவில்லிபுத்தூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
X
திருவில்லிபுத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முத்துச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜெயராம், தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் (30) என்பவரும் சென்றார். திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் ஒன்று ஜெயராம் வந்த இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சிக்கி படுகாயமடைந்தனர். அந்தப் பகுதியில் சென்றவர்கள் இது குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து சென்ற போலீசார் காயமடைந்து கிடந்த ஜெயராம் மற்றும் கனகராஜ் இருவரையும் மீட்டு, திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜெயராம் பரிதாபமாக உயிரிழந்தார். கனகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!