திருவில்லிபுத்தூர் பகுதியில் பரவலாக மழை

திருவில்லிபுத்தூர் பகுதியில் பரவலாக மழை
X

திருவில்லிபுத்தூர் பகுதிகளில் பரவலாக பெய்த  மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

மாலையிலிருந்து இரவு வரை விட்டு, விட்டு சாரல்மழை பெய்ததால் வேலைகள் முடிந்து வீடுகளுக்கு சென்றவர்கள் சிரமம் அடைந்தனர்

திருவில்லிபுத்தூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. லேசான சாரல்மழை பெய்த நிலையில், விட்டு விட்டு பரவலாக பலத்த மழை பெய்தது. மாலையிலிருந்து இரவு வரை விட்டு, விட்டு சாரல்மழை பெய்ததால் வேலைகள் முடிந்து வீடுகளுக்கு சென்றவர்கள் சற்று சிரமம் அடைந்தனர். திடீர் மழையால் திருவில்லிபுத்தூர், மல்லி, மானகசேரி, பண்டிதன்பட்டி, படிக்காசுவைத்தான்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயப் பணிகள் நன்றாக நடப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai tools for education