ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சந்தன மரங்களை கடத்திய மூன்று பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சந்தன மரங்களை  கடத்திய மூன்று பேர் கைது
X

பைல் படம்

சந்தன மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்

திருவில்லிபுத்தூர் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்திய, வத்தலக்குண்டு கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கோ.தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (51). இவர் தனக்கு சொந்தமான நூற்பு ஆலை அருகேயுள்ள தோட்ட வளாகத்தில் நூற்றுக்கணக்கான சந்தன மரங்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தோட்டத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த 3 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர்.

இது குறித்து முருகவேல் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், தோட்ட வளாகத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்ற கும்பல் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து வத்தலகுண்டுக்கு சென்ற தனிப்படை போலீசார், சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்ற வனராஜ் (51), வீராணன் (35), சவுந்திரபாண்டியன் (30), ராமசாமி (30), மாயகிருஷ்ணன் (32) ஆகிய 5 பேரையும் பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ சந்தனக் கட்டைகள் மற்றும் 74 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!