திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா
ஆன்டாள் கோயில் கொடியேற்றம்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ,சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும், பங்குனி உத்திரம் திருநாளில் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், தினசரி ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெறும்.
வரும் ஏப்ரல் 5ம் தேதி (புதன் கிழமை) ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறும்.
அன்று காலை, ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் செப்புத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். அதனையடுத்து பெரியாழ்வார் ஸ்ரீஆண்டாளை கன்னிகா தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
அன்று இரவு, ஆடிப்பூர கொட்டகையில் எழுந்தருளும் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு, இரவு 7 மணி முதல், 8 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறும். வரும் 9ம் தேதி (வெள்ளி கிழமை) குறடு மண்டபத்தில் புஷ்பயாகத்துடன் திருக்கல்யாண விழா நிறைவு பெறும்.
திருக்கல்யாண திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu