திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து

திருவில்லிபுத்தூரில் பஞ்சு மில்லில் தீடீர் தீ விபத்து
X

தீ விபத்தில் எரிந்து சேதமான பஞ்சு மூட்டைகள்.

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் பகுதியில், தனியார் பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் பகுதியில், தனியார் பஞ்சு மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தங்குளம் பகுதியில், தனியார் பஞ்சு ஆலை இயங்கி வருகிறது. ஆலை குடோனில் கழிவு பஞ்சு மூடைகள் போட்டு வைக்கப்பட்டிருந்தது. நேற்று கழிவு பஞ்சு மூடைகள் இருந்த குடோன் பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் பஞ்சு மூடைகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!