அழகருக்கு மாலை சூடிக்கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
X
By - A.Stalin, Reporter |27 April 2021 6:57 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு மங்கல பொருட்கள் கள்ளழகருக்கு அணிவிப்பதற்கான, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு உள்ளிட்ட மங்கல பொருட்கள், மதுரை ஸ்ரீகள்ளழகருக்கு அணிவிப்பதற்கான, கொண்டு செல்லப்பட்டன. ஊரடங்கினால் விழா ரத்தான நிலையிலும், ஆகாம விதிகளின்படி ஸ்ரீ கள்ளழகருக்கு பூஜை வழிபாடு நடப்பதால், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு மாலை கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீ ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து, காலங்காலமாக நடைபெற்று வருகிறது
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கும் கள்ளழகர் நள்ளிரவில் திருமஞ்சனம் முடிந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டுதான் தங்க குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகையில் இறங்குவார்.
இது, பலநூறு ஆண்டுகாலமாக நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு கள்ளழகர் மதுரைக்கு வராவிட்டாலும் கோவிலிலேயே கருட வாகனத்தில் வந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கிறார். அவருக்கு அணிவிக்க ஏதுவாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu