/* */

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி: ஹெச். ராஜா வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென பாஜக வலியுறுத்தல்

HIGHLIGHTS

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி: ஹெச். ராஜா வலியுறுத்தல்
X

பாஜக மூத்த தலைவர் யெச். ராஜா

கள்ளக்குறிச்சி மாணவியின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆஜரானார். கடந்த 2018ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில், இந்து முன்னணி அமைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஹெச்.ராஜா பேசும்போது, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்தும், அவர்களது குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக பேசியது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் இறந்து 6 நாள் ஆன நிலையிலும், அவரது பெற்றோர் உடலை வாங்க மறுத்து வருகின்றனர். ஒரு பிரச்னையை சரியாக தீர்ப்பதற்கு, மாநில அரசு நிர்வாகம் இத்தனை நாள்கள் எடுத்துக் கொண்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசங்கத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்பதற்கு இந்த சம்பவமே ஒரு உதாரணம். மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் முதல்வர் ஸ்டாலினும், அவரது கட்சியினர் இழப்பீடு என்று ஓடி ஓடி பணத்தை வழங்குகின்றனர். அதே சமயம் ஒரு இந்து பாதிக்கப்பட்டால் முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்வதில்லை.

கள்ளக்குறிச்சியில் இறந்துபோன மாணவி இந்து என்பதால், முதல்வர் உட்பட யாருமே சென்று பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக 25 லட்சம் ரூபாயை, தமிழக அரசு இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும். சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து, சம்பவம் நடந்த பள்ளிக்குள் ஒரு பெரும் கும்பல் நுழைந்து பள்ளி வாகனங்கள் மற்றும் போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு பெரிய அராஜகம் நடக்கும்போது போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர்.

இது தமிழக காவல்துறைக்கு மிகப்பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி சைக்கிளிங் செல்வதற்கும், செல்பி எடுத்து இணையதளத்தில் பதிவிடுவதற்கு மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் அதிகாரிகளுக்குள் அதிகாரச் சண்டை நடக்கிறது. இதனை முதல்வர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிக்குள் கலவரத்தில் ஈடுபட்டவர்களை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்று பேசினார்.

அப்போது தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒரு கேள்வி கேட்க, நீ யார், எந்த தொலைக்காட்சி, ஏன் ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கி பேசுற என்று ஒருமையில் பேசினார். நான் பேசுவதைத்தான் நீங்கள் டிவியில் போட வேண்டும். நீ கேட்பதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று பேசிய எச்.ராஜா,

பத்திரிக்கையாளர்கள் எல்லாம் அறிவாலயத்தின் கைக்கூலிகள் என்று கூறினார். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும், எச்.ராஜாவிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டு எச்.ராஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பாஜக கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாகவும், அவமரியாதையாகவும் நடப்பதை திருவில்லிபுத்தூர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 19 July 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...