சிவகாசி, மதுரை பகுதிகளில் மழை: சேறும் சகதியுமாக மாறி சாலைகளால் மக்கள் அவதி

சிவகாசி, மதுரை பகுதிகளில் மழை: சேறும் சகதியுமாக மாறி சாலைகளால் மக்கள் அவதி
X

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது . இரவில் கடும் குளிர் ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மாண்டஸ் புயலின் தாக்கத்தால் பரவலாக சாரல் மழை பெய்தது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. மேலும் கடந்த ஒரு வாரமாக வெயில் இல்லாமல் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இன்று காலையில் குளிர் காற்று சற்று குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்பு இன்று அதிகாலையில் இருந்தே சுள்ளென்று வெயில் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறினர்.

வடகிழக்கு பருவமழை துவங்கிய போது விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், சில நாட்கள் பரவலாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்யும், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து இருந்து பெருகும் என்று நம்பிய நிலையில், திடீரென்று மழைப்பொழிவு முற்றிலும் நின்று போனது. இதனால் நீர் நிலைகளுக்கு போதுமான தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் வாய்ப்பு இருப்பதால், விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து நீர் நிலைகள் பெருகும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

மதுரை நகரிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. பகலில் குளிர் காற்று வீசு தொடங்கியது. மேலும், தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது . இரவில் கடும் குளிர் ஏற்பட்டது. இதனால், சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் அவதி அடைந்தனர். மதுரை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!