நீதிமன்றத்தில் தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த போலீஸார்

நீதிமன்றத்தில்  தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த போலீஸார்
X

போக்ஸோ கைதி சுரேஷ்

திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தப்பி ஓடிய போக்சோ கைதியை 10 நிமிடத்தில் போலீஸார் மடக்கி பிடித்தனர்

விருதுநகர்மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வன்னியம்பட்டி காவல் நிலையத்தில், கடந்த 2021ம் ஆண்டு பள்ளி மாணவி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, சங்கரன்கோவில் மாவட்டம், குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சிறையிலிருந்த சுரேஷை, விருதுநகர் ஆயுதப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்திருந்தனர். நீதிமன்ற வளாகத்தில் போலீசாருடன் நின்றுகொண்டிருந்த சுரேஷ், சிறுநீர் கழிக்கச்செல்வதாக கழிப்பறைக்கு சென்றுள்ளார். கழிப்பறைக்குச் சென்ற சுரேஷ், போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தப்பி ஓடிய சுரேஷை 10 நிமிடத்தில், திருவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிமன்ற வளாகத்திலிருந்து, போக்சோ கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai future project