ஆண்டாள் கோவிலில், சவுமியா அன்புமணி சுவாமி தரிசனம்..!

ஆண்டாள் கோவிலில், சவுமியா அன்புமணி சுவாமி தரிசனம்..!
X

ஆண்டாள் கோயிலில், சவுமியா அன்புமணி சுவாமி தரிசனம்.

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி சுவாமி தரிசனம் செய்தார்.

திருவில்லிபுத்தூர் :

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான டாக்டர் சௌமியா அன்புமணி மற்றும் மகள் சஞ்ஜுமித்ரா இருவரும் நேற்று இரவு திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

டாக்டர் சௌமியா அன்புமணிக்கு, பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா தலைமையில், பாமக கட்சியினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். ஸ்ரீஆண்டாள் கோவில் நிர்வாகம் சார்பில், டாக்டர் சௌமியா அன்புமணிக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, ஆண்டாள் மாலை, கிளி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாமக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!