திருவில்லிபுத்தூரில் குழந்தைகளுடன் தாய் மாயம்

திருவில்லிபுத்தூரில் குழந்தைகளுடன்   தாய் மாயம்
X
காளீஸ்வரி அவரது குழந்தைகள் திடீரென்று காணாமல் போனார்கள். பல இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை

திருவில்லிபுத்தூர் அருகே, 2 குழந்தைகளுடன் தாய் காணாமல் போன சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி காளீஸ்வரி (29). மகள் கனீஷ்கா (9), மகன் சர்வேஸ்வரன் (7) உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. சுரேஷ் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டிலிருந்த காளீஸ்வரி மற்றும் அவரது குழந்தைகள் திடீரென்று காணாமல் போனார்கள். பல இடங்களில் தேடியும் அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சுரேஷ், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
வணிக வளர்ச்சியில் புதிய வெற்றிக்குறி – செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மேம்பட்ட திட்டமிடல் முறைகள்!