இராஜபாளையத்தில் புதை சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்களை சீரமைக்க வலியுறுத்தல்

இராஜபாளையத்தில் புதை சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்களை சீரமைக்க வலியுறுத்தல்
X

தெற்கு காவல் நிலையம் அருகே சேத்தூர் சேவுக பாண்டியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் பாதையில் உள்ள பள்ளம்

பள்ளி செல்லும் பாதையில் புதை சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மூடப்படாமல் பள்ளமாக காட்சியளிக்கிறது.

இராஜபாளையம் நகர் பகுதியில் புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இராஜபாளையம் நகர் பகுதியில் புதைசாக்கடை திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தெருக்களில் பணிகள் நிறைவுற்ற நிலையில், முக்கிய சாலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றது. தெற்கு காவல் நிலையம் அருகே சேத்தூர் சேவுக பாண்டியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் பாதையில், புதை சாக்கடை திட்டத்திற்காக தோண்டப் பட்டுள்ள பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் பள்ளமாக காட்சியளிக்கிறது.

இதனால் ,அதை கடந்து செல்லும் மாணவிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளும் அவ்வப்போது கீழே விழுந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணியை சரிவர செய்யவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இதுபோன்ற பள்ளங்களை தாமதமின்றி சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare