இராஜபாளையத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்

இராஜபாளையத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு  நாள்
X
ராஜபாளையம் எம்எல்ஏ தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு நாள்:

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் திமுக சார்பில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சொந்த ஊரான செட்டியார்பட்டியில் தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவருமான, கருணாநிதி, நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முகவூர் காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து செட்டியார் பட்டியில் கலைஞர் கருணாநிதி திரு உருவப்படத்திற்கு, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மலர் தூவி அஞ்சல் செலுத்தினார் .

இந்த நிகழ்ச்சியில், ஒன்றியத் தலைவர் சிங்கராஜ், இராஜபாளையம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது !.. 5 டிப்பா் லாரிகள் பறிமுதல்