திருவில்லிபுத்தூர் கோயில் அருகே சிகரெட் விற்பனை கடைகளுக்கு அபராதம்

திருவில்லிபுத்தூர் பகுதியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் கடையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள்
திருவில்லிபுத்தூர் பகுதியில், வழிபாட்டுத்தலங்கள் அருகே சிகரெட் விற்பனை செய்த கடைகளுக்கு சுகாதாரத்துறை அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவு விடுதிகள் மற்றும் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். உணவகங்களில் தடை செய்யப்பட்டுள்ள அஜினமோட்டா பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 10 கிலோ, அஜினமோட்டா 5 கிலோ, மேலும் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட கோழி இறைச்சி, மீன் இறைச்சி உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே சிகரெட் விற்பனையில் ஈடுபட்ட 8 கடைக்காரர்களுக்கு, தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த திடீர் சோதனையில் சுகாதார ஆய்வாளர்கள் பூபன்ரமேஷ், கணேஷ், நரேன், சூரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இனி 1, 2 சிகரெட் வாங்க முடியாது.. மத்திய அரசு விரைவில் உத்தரவு..
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 லட்சம் பேர் சிகரெட் புகைப்பதால் மரணம் அடைகின்றனர். 2018 ஆம் ஆண்டில், நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் நடத்திய ஆய்வில் புகைபிடிப்பவர்களில் 46% பேர் படிப்பறிவில்லாதவர்கள் என்றும், 16% பேர் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை இந்தியாவில் கட்டுப்படுத்த ஒற்றைச் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய இந்நாடாளுமன்றத்தின் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது . சில்லறை சிகரெட் விற்பனை மூலம் அரசின் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் பிரசாரத்தைச் சீர்குலைப்பதாகப் பாராளுமன்றத்தின் நிலைக்குழு கூறியது. இதனால் 1, 2 சிகரெட் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
200 ரூபாய் அபராதம் இந்தியாவில் பொது இடங்களில் புகைபிடிப்பது ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதியை மீறியவர்கள் மீது சுமார் 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் புகையிலை பொருட்களின் விளம்பரத்திற்கும் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu