ராஜபாளையத்தில் விவசாயிகளுக்கு நாட்டு வாழைக்கன்றுகள் விநியோகம்

ராஜபாளையத்தில் தென்னையில் ஊடுபயிராக நாட்டு வாழை கிழங்குகள் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட்டது.
ராஜபாளையத்தில் தென்னையில் ஊடுபயிராக நாட்டு வாழை கிழங்குகள் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட்டது.
இவை தென்னையில், ஊடுபயிராக பயிரிடும்போது தென்னைக்கு தண்ணீர் பாய்ச்சுவது வாழைக்கன்றுகளுக்கும் ஏதுவாக இருக்கும் என, கருதி இந்த முழு முயற்சியில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஈடுபட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.விவசாயிகள் ஆர்வத்துடன் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள்...தொடக்கக் காலத்தில் அனைத்து தோட்டக்கலைத் திட்டங்களும் வேளாண் துறையின் கீழ் ஒரு தனி பிரிவாக செயல்படுத்தப்பட்டது. சென்னையில் வேளாண் இயக்குநரகத்தில் தோட்டக்கலை இணை இயக்குநர் (வணிகபயிர்கள்) இத்துறைக்கு தலைமை தாங்கினார்.
மாநிலத்தில், தோட்டக்கலையின் தேவை மற்றும் முக்கியதுவத்தை கருத்தில் கொண்டு 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் மூத்த அதிகாரியினை தலைமையாக கொண்டு உருவாக்கப்பட்டது. தோட்டக்கலை இயக்கநரகம் 1992 இல் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.எல்.ஏ கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. 1992 ஆம் ஆண்டு முதல், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பதவி ஐ.ஏ.எஸ் தகுதியில் பதவியாக தமிழ்நாடு அரசு மாற்றியமைத்தது.
1979 ஆம் ஆண்டில்துறை உருவாக்கப்பட்டபோது, தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு 6.60 இலட்சம் எக்டேராகவும், உற்பத்தி 24.33 இலட்சம் மெட்ரிக் ஆகவும் இருந்தது. இன்று, தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு 13.76 இலட்சம் எக்டேராகவும், உற்பத்தி 186.68 இலட்சம் மெட்ரிக் டன் (2018-19) ல் அதிகரித்துள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியினை அதிகரிக்கவும் மாவட்டம் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் தொழில்நுட்ப அலுவலர்களை அனைத்து மாவட்டங்களிலும் வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் நியமிக்கப்பட்டனர்.
தோட்டக்கலை இயக்குநரகம் 1997 ஆம் ஆண்டில் சேப்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளான் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கத்தினை கருத்தில் கொண்டு தோட்டக்கலை திட்டங்களை விரைவான முறையில் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 2003 ஆம் ஆண்டில் மாநிலத்தில் தோட்டக்கலை மேம்பாட்டிற்கான ஒரு புதிய திட்டமான தேசிய தோட்டக்கலை இயக்கத்தை அறிமுகப்படுத்தியது.
காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் மருத்துவ தாவரங்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புகூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் சீரான ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் உற்பத்தியை தரமானநடவுப் பொருட்கள்,அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை - குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றிக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்து வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். தோட்டக்கலை ஊக்குவிக்கும் இப்புதிய திட்டத்தினை துவங்கி இந்தியாவின் மாநிலங்களிடையே தமிழகம் முன்னோடியாக திகழ்ந்தது.
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை:தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையானது தமிழ்நாடு கூட்டுறவு பதிவுச் சட்டம் 1975ன் கீழ் பதிவு செய்யப்பட்டு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு வகையான தோட்டக்கலைசார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் ஒரு "சிறப்புநோக்க அமைப்பாக" 2004 ஆம் வருடம் முதல் செயல்பட்டுவருகிறது. டான்ஹோடா உருவாக்கப்பட்டதின் மூலம், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினம் துரிதமுறையில் செயல்படுத்தப்பட்டு, திட்டங்கள் தகுந்த நேரத்தில் சாதனை அடையப்பட்டது.
தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்: ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் (தேசிய தோட்டக்கலை இயக்கம்), பிரதம மந்திரியின் விவசாயத்திற்கான நீர்ப்பாசனத் திட்டம்,மருத்துவப் பயிர்களுக்கான - தேசிய ஆயுஷ் இயக்கம், தேசிய மூங்கில் இயக்கம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம். இத்திட்டங்களைத்தவிர, 78 மாநில தோட்டக்கலை பண்ணைகள் மற்றும் 27 பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் டான்ஹோடாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.அரசு தோட்டக்கலைப் பண்ணைகளுக்கான நிதி ஒப்புதல் வேளாண் உற்பத்தி ஆணையர் /இயக்குநர் / தோட்டக்கலை ஆணையர்(நிர்வாக இயக்குநர்)தலைமையிலான நிர்வாக குழுவால் அங்கீகரிக்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu