ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்

முத்துக்குமாரபுரம் பகுதியில் சேதமடைந்துள்ள பயிர்களை சோகத்துடன் காண்பிக்கும் விவசாயிகள்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துலுக்கப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட முத்துக்குமாரபுரம் பகுதியில், அதிகளவு பருத்தி மற்றும் செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக, நிரம்பியுள்ள நிலையில் இருந்து வரக்கூடிய நீரானது, விளைநிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துக்குமாரபுரம் பகுதியில், தங்க முனியாண்டி என்பவரின் விவசாய நிலத்தில், பருத்தி மற்றும் மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu