ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மீது குற்றப் பத்திரிக்கை

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், எம்.பி .மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக எழுந்த புகார்களின் பேரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி வள்ளிமணாளன் முன்னிலையில், குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். முதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் மீதும், 2வது வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட 8 பேர் மீதும் 40 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu