திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து திருவரங்கம் ஆலய பிரசாதம்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து திருவரங்கம் ஆலய பிரசாதம்
X
திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சார்த்துவதற்காக, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கமன்னார் சார்த்திய வஸ்திரம் வந்து சேர்ந்தது

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாளுக்கு சார்த்துவதற்காக ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கமன்னார் சார்த்திய வஸ்திரம் திருவில்லிபுத்தூர் வந்து சேர்ந்தது.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கமன்னார் சுவாமிக்கு சார்த்திய வஸ்திரம் ஸ்ரீஆண்டாளுக்கு சார்த்துவதற்காக இன்று கொண்டு வரப்பட்டது.

108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று, ஆடிப்பூரம் தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தின் போது, தேரில் வீற்றிருக்கும் ஸ்ரீஆண்டாளுக்கு, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதருக்கு சாற்றிய வஸ்திரம் சார்த்தப்படும்.

இன்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பட்டாச்சாரியார்கள் பட்டு வஸ்திரம் மற்றும் மாலை உள்ளிட்ட மங்கலப் பொருட்களை, ஸ்ரீஆண்டாள் கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் மேளதாளங்களுடன் வழங்கினர். இந்த வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நாளை காலை தேருக்கு ஸ்ரீஆண்டாள் புறப்படும் சமயத்தில் சாற்றப்படும். ஸ்ரீரங்கநாதர் வழங்கிய வஸ்திரத்துடன் தேரில் எழுந்தருளிய பின்பு ஆடிப்பூரம் தேரோட்டம் வெகு உற்சாகமாக நடைபெறும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்