கண்ணாடி மாளிகையில் எழுந்தருளிய ஆண்டாள்
திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளினார்
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், தினமும் ஸ்ரீஆண்டாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். வைகாசி ஏகாதசி நாளை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள 'கண்ணாடி மாளிகையில்' எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது. இந்தக் கோவிலானது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது.
இவருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடி கொடுத்தாள், என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றது. இங்கு அமைந்துள்ள கோபுரம் 196 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது. தமிழக அரசின் ராஜகோபுரத்தில் இந்த முத்திரை இடம்பெற்றுள்ளது, இதற்கான தனிச்சிறப்பு. கோவிலின் இரண்டாம் பகுதி ஆண்டாள் சந்நிதி. இங்கு உள்ள கல்வெட்டுகளில் ‘சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாளுக்கு சுத்தப்படும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்சாவழியினர் உள்ளனர். மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் இவற்றைக்கொண்டு தினம்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்துவருகிறார்கள். மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி கிணறு இன்று உண்டியல் ஆக பயன்படுத்தப்படுகிறது.
திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது வாரம் சனிக்கிழமை அன்று இங்கு உள்ள ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். அதேபோல் ஆண்டாளின் திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை வருவது சிற்ப்பான நிகழ்வாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu