விருதுநகர் அருகே அரசு அலுவலக செயல்பாடுகளை அறிய, மாணவர்களுக்கு வாய்ப்பு!

விருதுநகர் அருகே அரசு அலுவலக செயல்பாடுகளை  அறிய, மாணவர்களுக்கு வாய்ப்பு!
X

அரசு அலுவலகங்களில், செயல்பாடு அறியும் பள்ளி மாணவ, மாணவியர்கள்.

விருதுநகர் அருகே அரசு அலுவலக செயல்பாடுகளை அறிய, மாணவர்களுக்கு வாய்ப்பு!

பள்ளி மாணவ மாணவிகள் அரசு அலுவலக செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார்

மற்றும் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ராமமூர்த்தி வட்டார வளர்ச்சி துணை அலுவலர் பூமாரி ஆகியோர் சத்திரப்பட்டி ஆண்கள் மேல்

நிலைப்பள்ளியில், இருந்து துணை தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வந்த 25 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எவ்வாறு செயல்படுகிறது, குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த அலுவலகம் மூலம் கிராம மக்கள் எவ்வாறு பயன்படுகின்றனர் என்பது குறித்தும், விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகம் ,காவல் நிலையம், நீதிமன்றம், வங்கி செயல்பாடுகள் குறித்தும் மாணவர்கள் கேட்டறிந்தனர் .

இது குறித்து மாணவர்கள் கூறும்பொழுது:

அரசு அலுவலகங்கள் செயல்பாடு குறித்து அறிந்து கொள்ள நல்லவாய்ப்பாக இது அமைந்ததாக இருந்தது என, மாணவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!