ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடை தீ பிடித்து எரிந்து சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடை தீ பிடித்து எரிந்து சேதம்
X

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடையில் தீ பிடித்து எரிந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்ககுமார் (வயது50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சொந்தமாக பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இன்று அதிகாலையில் கடைக்குச் சென்ற முத்துராமலிங்ககுமார், கடைக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கடையை திறந்து பார்த்தார். அப்போது கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்து உடனடியாக, ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த திடீர் தீ விபத்தில் கடையில் வைத்திருந்த பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பழைய பொருட்கள் உள்ளிட்ட சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துராமலிங்க குமார் தகவல் தெரிவித்த உடன் தீயணைப்பு துறையினர் தாமதம் இன்றி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததால் பெரிய அளவிலான தீ விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இல்லை என்றால் தீ மற்ற கட்டிடங்களுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும். சரியான நேரத்தில் வந்து தீயை அணைத்த தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
பயிற்சியை முழுமையாக பயன்படுத்தினால் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெறமுடியும்..!