காய்கறி கடைக்குள் புகுந்த டிராக்டர்: இருவர் படுகாயம்

காய்கறி கடைக்குள் புகுந்த டிராக்டர்: இருவர் படுகாயம்
X

காய்கறி கடைக்குள் புகுந்த டிராக்டர்.

வத்திராயிருப்பு அருகே, காய்கறிக் கடைக்குள் டிராக்டர் வண்டி புகுந்து விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்

வத்திராயிருப்பு அருகே, காய்கறிக் கடைக்குள் டிராக்டர் வண்டி புகுந்து விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர் வண்டியில் எம்சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு, அழகாபுரியில் இருந்து நெடுங்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை, நெடுங்குளத்தைச் சேர்ந்த ராம்குமார் ஓட்டி வந்தார்.

கோட்டையூர் அருகே டிராக்டர் வந்த போது எதிரே வந்த மினி லோடு வேன் மீது லேசாக மோதியது. இதில் டிராக்டர் வண்டி கட்டுப்பாட்டை இழந்து, அந்தப் பகுதியில் இருந்த காய்கறிக் கடைக்குள் புகுந்தது. டிராக்டர் புகுந்ததால் காய்கறிக் கடையும் பலத்த சேதமடைந்தது. இந்த எதிர்பாராத விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் ராம்குமார், இவருடன் வந்த அய்யாச்சாமி இருவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!