சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை ஏற்பாடுகள் தீவிரம்

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை ஏற்பாடுகள் தீவிரம்
X

சதுரகிரி சுந்தர மகாலிங்க ஆலயம்: 

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சதுரகிரிமலையில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சதுரகிரிமலையில் ஆடி அமாவாசை விழா ஏற்பாடுகள் தீவிரம்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமிகோவில். சதுரகிரிமலை சித்தர்கள் வசிக்கும் மலை என்பது பெரும்பாலான பக்தர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அமாவாசையன்று இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது.

வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, ஆடி அமாவாசை பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி (செவ்வாய் கிழமை) பிரதோஷம் நாளிலிருந்து, தொடர்ச்சியாக 4 நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை திருவிழா வரும் 28ம் தேதி (வியாழன் கிழமை) நடைபெறுகிறது. அன்று தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதற்கு வசதியாக மலைப் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் கார்கள் மற்றும் பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதியாக தாணிப்பாறை அடிவாரப்பகுதியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதனை சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags

Next Story
கொல்லிமலையில் மலைவாழ் மக்கள் தார் சாலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!