சிவகாசி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது

சிவகாசி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது
X
மதுரை அருகே சிறுமியுடன் பதுங்கியிருந்த சரவணகுமாரை போலீசார் பிடித்து சிவகாசிக்கு அழைத்து வந்தனர்

சிவகாசி அருகே, சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள முத்துராமலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயதுள்ள மகள் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (27) என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக சிறுமியின் பெற்றோர், சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரை அருகே சிறுமியுடன் பதுங்கியிருந்த சரவணகுமாரை போலீசார் பிடித்து, சிவகாசிக்கு அழைத்து வந்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், சரவணகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags

Next Story