சாலை விபத்தில் இறந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதியுதவி

சாலை விபத்தில் இறந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதியுதவி
X

சாலை விபத்தில் பலியான பெண் காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்களின் சார்பில்  ரூ. 26 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

2009 ம் ஆண்டு முத்துமுனீஸ்வரியுடன் பணிக்குச் சேர்ந்த சக காவலர்கள் ஒன்று சேர்ந்து ரூ,26 லட்சம் நிதி உதவி அளித்தனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் முத்துமுனீஸ்வரி (34). இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, முத்துமுனீஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் காவல்நிலையம் செல்லும் போது நேரிட்ட சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், முத்துமுனீஸ்வரி பணிக்குச் சேர்ந்த 2009ம் ஆண்டு, அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்று சேர்ந்து, முத்துமுனீஸ்வரியின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்துள்ளனர். காவலர்கள் நிதியாக திரட்டிய 26 லட்சம் ரூபாயை, முத்துமுனீஸ்வரியின் மகன்கள் சக்திவேல் பாண்டியன் (7), சிவசக்தி பாண்டியன் (5) இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாயை எல்ஐசியிலும், தலா 3 லட்சம் ரூபாயை தபால் நிலைய கிஸான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்து வழங்கினர். மேலும், முத்துமுனீஸ்வரியின் கணவர் பார்த்தசாரதியிடம் 42 ஆயிரம் ரூபாய் பணத்தையும், காவலர்கள் வழங்கினர். உதவி செய்த காவலர்களுக்கு உயிரிழந்த காவலர் முத்துமுனீஸ்வரியின் குடும்பத்தினர் நன்றி கூறினர்.

Tags

Next Story