காரியாபட்டி அருகே ,ஊரணி மேம்பாட்டுப் பணிகள்: பேரூராட்சித் தலைவர் ஆய்வு

காரியாபட்டி அருகே ,ஊரணி மேம்பாட்டுப் பணிகள்: பேரூராட்சித் தலைவர் ஆய்வு
X

காரியாபட்டி அருகே, ஊரணியில் வளர்ச்சிப் பணிகளை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார். 

Development Work President Inspection கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பிட்டில், காரியாபட்டி செவல்பட்டி ஊரணி மேம்பாட்டு பணிகள்: பேரூராட்சி தலைவர் செந்தில் தகவல் தெரிவித்தார்.

Development Work President Inspection

காரியாபட்டி செவல்பட்டி மந்தை ஊரணி மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில் இது குறித்து கூறியபோது: காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணிகள் நீண்ட நாட்களாக தூர்வாரப் படாமல் கிடந்தது. பேரூராட்சிக் குட்பட்ட பகுதியில் உள்ள ஊரணி களை பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உத்தரவின் பேரில் , ஊரணி மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. 15-வது நிதிக்குழு மான்ய திட்டத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் வாணிச்சி ஊரணி பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

அதே போல, காரியாபட்டி செவல்பட்டி மந்தை ஊரணியை கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில். 28 லட்சம் மதிப்பபில் ஊரணியில் மேம்பாட்டு பணிகள், நடைபெறவுள்ளது. மந்தை ஊரணியை தூர்வாரப்பட்டு கரைப் பகுதியை சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு நடைபயிற்சி பாதையாக அமைக்கப்படும். ஊரணி மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடங்கப் படும். என்று பேரூராட்சி சேர்மன். செந்தில் தெரிவித்தார். அப்போது, பொறியாளர் கணேசன். கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்