கொலை வழக்கில் கைதான வரிச்சூர் செல்வம் மதுரையில் சிறையில் அடைப்பு

கொலை வழக்கில் கைதான வரிச்சூர் செல்வம் மதுரையில் சிறையில் அடைப்பு
X

வரிச்சூர் செல்வம் மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டார்

நேற்றுடன் போலீஸ் காவல் விசாரணை முடிந்த நிலையில், வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் நீதிமன்றத்தில், நீதிபதி கவிதா முன்பு போலீசார் ஆஜர் படுத்தினர்

விருதுநகர் அருகேயுள்ள அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். மதுரையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தன்னை செந்தில்குமார் சிக்க வைத்து விடுவார் என்று நினைத்த வரிச்சியூர் செல்வம், சென்னையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை தனது கூட்டாளிகளின் மூலம் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து, அந்த உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிய வந்தது.

செந்தில்குமார் கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்தை, அருப்புக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருன்காரட் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வம், முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி கவிதா, வரிச்சியூர் செல்வத்தை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதனையடுத்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில், வரிச்சியூர் செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நேற்றுடன் போலீஸ் காவல் விசாரணை முடிந்த நிலையில், வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் நீதிமன்றத்தில், நீதிபதி கவிதா முன்பு போலீசார் ஆஜர் படுத்தினர். வரிச்சியூர் செல்வத்தை வரும் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வரிச்சியூர் செல்வம் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில்குமார் கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்திற்கு உதவியாக இருந்தவர்கள் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!