சிவகாசி விஸ்வநாதர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா

சிவகாசி விஸ்வநாதர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா
X

சிவகாசி சிவன் கோவிலில், ஊஞ்சலில் எழுந்தருளிய ஸ்ரீவிஸ்வநாதர் - ஸ்ரீவிசாலாட்சி அம்மன்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், வைகாசி பிரமோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகாசி சிவன் கோவிலில், ஊஞ்சலில் எழுந்தருளிய ஸ்ரீவிஸ்வநாதர் - ஸ்ரீவிசாலாட்சி அம்மன்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், வைகாசி பிரமோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீவிசாலாட்சி, ஸ்ரீபிரியாவிடை சுவாமிகள் பூரண அலங்கரத்தில் கொடிமரம் முன்பு ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீவிசாலாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மண்டகப்படி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!