ரயில்வே போலீஸார் சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி

ரயில்வே போலீஸார் சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி
X

விருதுநகரில் ரயில்வே போலீஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது

Two-wheeler rally organized by Railway Police

விருதுநகரில் ரயில்வே போலீஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இந்திய நாட்டின் 75 வது சுதந்திரதின விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதுகாப்பு போலீசார் கலந்து கொண்ட இருசக்கர வாகன பேரணி, மதுரை ரயில் நிலையத்தில் துவங்கியது. விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்புபடை போலீசாரை, பாதுகாப்புபடை ஆய்வாளர் ராஜன் நாயர், சார்பு ஆய்வாளர் மலைப்பாண்டி மற்றும் ரயில்வே போலீசார் வரவேற்றனர்.

ரயில் பயணங்களின் போது பயணிகள் கவனிக்க வேண்டிய முறைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. விருதுநகரில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிக்கு ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் இருசக்கர வாகன பேரணியாக செல்லும் ரயில்வே பாதுகாப்புபடை போலீசாருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story
future ai robot technology