தீப்பிடித்து எரிந்த பேட்டரி வாகனம்: நடுரோட்டில் நடந்த சம்பவம்

தீப்பிடித்து எரிந்த பேட்டரி வாகனம்: நடுரோட்டில் நடந்த சம்பவம்
X
சிவகாசியில் சாலையில் சென்ற, இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன் (40). வியாபாரியான கண்ணன், தனது இருசக்கர பேட்டரி வாகனத்தில் சென்றபோது வாகனம் பழுதாகி நின்றது. உடனடியாக வாகனத்தை சரி செய்வதற்காக மெக்கானிக் ஒருவரை கண்ணன் அழைத்துள்ளார். இருசக்கர வாகன மெக்கானிக், பழுதாகி நின்ற வாகனத்தை சரி செய்து சிவகாசி - சாத்தூர் சாலையில் இயக்கி பார்த்துள்ளார்.

வண்டி ஓடியபோது திடீரென்று கரும்புகை வந்துள்ளது. இதனால் மெக்கானிக், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு புகை வருவதை தடுக்க முயற்சி செய்தார். அப்போது திடீரென்று இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரியத்துவங்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. சாலையில் சென்று கொண்டிருந்த பேட்டரி வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது