குற்றச்செயல்களில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது

குற்றச்செயல்களில் ஈடுபட்ட  இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது
X
சிவகாசியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

சிவகாசியில், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுககிருஷ்ணன் (21). சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (25).. இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் இருவர் மீதும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டிக்கு பரிந்துரை செய்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் ஆறுமுககிருஷ்ணன் மற்றும் கணேஷ்பாண்டி இருவரையும் போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story