விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்த மேயர்

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்த மேயர்
X

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த மேயர்.

சிவகாசி மேயர் தனது காரில் ஏற்றிக் கொண்டு வந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உதவி செய்தார்

சிவகாசி அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மாநகராட்சி மேயர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிவு பெற்றபின்பு தனது காரில் சிவகாசிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள மத்தியசேனை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்த, பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (35), அவரது 9 வயது மகன் ஆகிய இருவரும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் சாலையோரம் கிடந்தனர்.

இதனைப் பார்த்த மேயர் சங்கீதா இன்பம், உடனடியாக தன்னுடைய காரை நிறுத்தி, விபத்தில் சிக்கி காயமடைந்து கிடந்த 2 பேரையும் மீட்டு தனது காரில் ஏற்றிக் கொண்டு வந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உதவி செய்தார். விபத்தில் சிக்கியவர்களை மனிதாபிமான எண்ணத்தில் மீட்டு விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு வந்த சேர்த்த மாநகராட்சி மேயருக்கு மருத்துவர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!