போக்ஸோ வழக்கில் வாலிபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

போக்ஸோ வழக்கில் வாலிபருக்கு  22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
X

பைல் படம்

அருப்புக்கோட்டை வாலிபருக்கு போக்ஸோ வழக்கில் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை வாலிபருக்கு போக்ஸோ வழக்கில், 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார் (20). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை மிரட்டி கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார், மகேஸ்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரணஜெய ஆனந்த், சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றவாளி மகேஸ்குமாருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings