சிவகாசி கல்லூரியில் தமிழ் மரபு விழா கோலாகலம்

சிவகாசி கல்லூரியில் தமிழ் மரபு விழா கோலாகலம்
X

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற தைப் பொங்கல் தமிழர் மரபு விழா

கல்லூரி மாணவிகளின் கைவண்ணத்தில் பெங்கல் வைத்து படையலிடப்பட்டது

சிவகாசி கல்லூரியில், 'தமிழர் மரபு திருவிழா' கொண்டாட்டம் கோலாகலாமக நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் தைப் பொங்கல் திருவிழாவை 'தமிழர் மரபு திருவிழா' என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடினர்.

தைப்பொங்கல் விழா நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, பாரம்பரிய வீர விளையாட்டு உள்ளிட்டவைகளுடன், ஜல்லிக்கட்டு காளைகள், தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தேவராட்டம், கருப்பசாமியாட்டம், தீப்பந்த சாகசம், பொய்க்கால் குதிரை, சுருள் வால் வீச்சு உள்ளிட்ட பாரம்பரிய வீர விளையாட்டுகள், நடனங்கள், மாட்டு வண்டி, நுங்கு வண்டி, பம்பரம் விளையாட்டு உள்ளிட்ட பழமையான சிறுவர்கள் விளையாட்டுகளும் இடம் பிடித்திருந்தன.

கல்லூரி மாணவிகளின் கைவண்ணத்தில் பெங்கல் வைத்து படையலிடப்பட்டது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தைப்பொங்கல் விழா நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடனும், உற்சாகத்துடன் கலந்து கொண்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கோஷமிட்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!