காரியாபட்டி பேரூராட்சியில் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணிகள் ஆய்வு

காரியாபட்டி பேரூராட்சியில் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணிகள் ஆய்வு
X

கட்டுமானப்பணிகளை காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில் பார்வையிட்டு, ஆய்வு செய் தார்.

காரியாபட்டி பேரூராட்சியில் 5 அங்கன்வாடி மையங்களின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காரியாபட்டி பேரூராட்சியில் 5 அங்கன்வாடி மையங்களின் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பள்ளி வாசல் தெரு, 2-வது வார்டு ஏ.நெடுங்குளம், 3-வது வார்டு ஜெகஜீவன்ராம் தெரு, 8-வது வார்டு அச்சம்பட்டி, 14-வது வார்டு கே.கரிசல்குளம் ஆகிய பகுதிகளில், தமிழக அரசின் நிதி ஆயோக் (2021-22) சிறப்பு திட்டத்தின் கீழ் 5 புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த கட்டிடங்களை, காரியாபட்டி பேரூராட்சித்தலைவர் செந்தில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், இளநிலை செயற்பொறியாளர் கணேசன், பேரூராட்சி உறுப்பினர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியராஜன், நாக ஜோதி ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

நிதி ஆயோக்...இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களின் முன்னேற்றத்தைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி ஆயோக் இணைத்து இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21-ன் மூன்றாம் பதிப்பை(அறிக்கை) வெளியிட்டுள்ளன.

கல்வி, சுகாதாரம், பாலினம், பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு தரவரிசை கணக்கிடப்படுகிறது. இந்த அறிக்கை 2030 திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச இலக்குகளின் விரிவான தன்மை மற்றும் தேசிய முன்னுரிமையை தெளிவாக எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது.

2020-21 நிதி ஆயோக் தரவரிசை மாநிலங்களுக்கான பட்டியலில் (16 இலக்குகளின் ஓட்டுமொத்த புள்ளிகள்) கேரளா 75 புள்ளிகள் உடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் இமாச்சலப்பிரதேசம் தலா 74 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், 72 புள்ளிகள் உடன் ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்து உள்ளன. பீகார், அசாம், ஜார்கண்ட் மாநிலங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளன. பீகார் 52 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு